2016ஆம் ஆண்டுக்கு பிறகு ஜிம்பாப்வே நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட திட்டமிட்டுள்ளது. அதன்படி, நேற்று முன்தினம் இந்தியா-ஜிம்பாப்வே இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹராரே நகரில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஜிம்பாப்வே அணி 40.3 ஓவர்களில் 189 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்-அவுட் ஆனது. இந்திய அணியோ 30.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 192 ரன்கள் எடுத்து 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில் இரு அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று ஹராரே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. முதல் ஒருநாள் போட்டியைப் போலவே இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறிய ஜிம்பாப்வே அணி 38.1 ஓவருக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 161 ரன்கள் மட்டுமே எடுத்தது. 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.