சீனா நாட்டின் Zhejiang மாகாணத்தில் உள்ள Tongxiang என்ற இடத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டின் ஜன்னல் வழியாக 2 வயதான குழந்தை ஒன்று தவறி கீழே விழுந்துள்ளது. இதனைப் பார்த்த அங்கிருந்த இருவர், பதறி அடித்துக்கொண்டு கட்டிடத்தின் பக்கவாட்டுக்குச் சென்று குழந்தையைப் பிடிக்க முயற்சி செய்கின்றனர். அப்போது, அவர் வேகமாக சென்றதன் காரணமாக கால் வழுக்கி கீழே விழப் பார்க்கிறார். ஆனாலும், அதனை கண்டுகொள்ளாமல் கால் சருக்களை சமாளித்தப்படி அவர், குழந்தையை லாவகமாகப் பிடித்து, பத்திரமாக மீட்கிறார். குழந்தை உயிரிருடன் காயங்கள் இன்றி மீட்கப்பட்டுள்ளது. இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் இடம் பெற்று வைரலாகி வருகிறது. இத்துடன் மக்கள் ரியல் ஹீரோ என இவரை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர். இவருடன் மேலும், ஒருவர் குழுந்தையின் உயிரை காப்பாற்ற முயன்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.