காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற எட்டாவது தேசிய யோகா தின நிகழ்ச்சியில் இந்தியாவின் இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா கலந்துக்கொண்டார். நிகழ்ச்சிக்குப் பின் காஞ்சிபுரம் உலகப் புகழ்பெற்ற காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு சாமி தரிசனம் மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ”என் தாயாரின் நீண்ட நாள் ஆசையாக இருந்த காமாட்சி அம்மன் தரிசனம் தற்போது மகிழ்ச்சியுடன் நிறைவு பெற்றது. செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக செஸ் போர்டு வாரியத்துக்கும், தமிழக முதலமைச்சருக்கு நன்றி. மாமல்லபுரம் போட்டிக்கான பயிற்சிகள் சிறப்பாக இருந்தது.
நான் சிறப்பாக பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். போட்டியின்போது வெற்றி எனும் நோக்கில் செயல்படுவதில்லை. தனது திறமையை வெளிப்படுத்துவதில் வெற்றி கிடைக்கிறது” என அவர் தெரிவித்தார்.