திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் நவலூர் குட்டப்பட்டியில் கடந்த 2012-2013 கல்வி ஆண்டு முதல் திருச்சி தேசிய சட்டப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த சட்டப்பள்ளியில் ஒருங்கிணைக்கப்பட்ட ஐந்தாண்டு இளநிலை சட்டப் படிப்புகளும், இரண்டாண்டு முதுநிலை பட்டப்படிப்புகளும் (எல்எல்எம்) சேர செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி திங்கள்கிழமையான இன்று முதல் விண்ணப்பிக்கலாம். இங்கு சேர்ந்து படிப்பதற்கு பொது சட்ட நுழைவுத் தேர்வில் (CLAT) தேர்ச்சிப்பெற்றிருக்கும் மாணவர்கள் www.tndalu.ac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.