சென்னை, பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் வகையில் சென்னை மாநகர காவல்துறை சார்பில் ‘சிற்பி’ என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ், சென்னை மாநகராட்சியில் 100 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் தலா 50 மாணவர்களுக்கு புதிய சீருடை மற்றும் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. சிறார் குற்றங்களை தடுக்கவும், போதைப்பொருள் உள்ளிட்ட தீய பழக்கங்களை தவிர்க்கவும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இத்திட்டத்தின் கீழ் 5 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு யோகா பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது. அதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.