8-வது சர்வதேச யோகா தினத்தையொட்டி, இன்று இந்தோ-திபெத்திய எல்லை காவல் படையினர், வடக்கில் லடாக் தொடங்கி கிழக்கு எல்லைகளில் சிக்கிம் வரையிலான பல்வேறு உயரமான இமயமலைத் தொடர்களில் யோகா பயிற்சி செய்தனர். 17,000 அடி உயரமான மலைத் தொடர்களில் உறைய வைக்கும் குளிருக்கு மத்தியில், இவர்கள் பல ஆண்டுகளாகவே யோகா பயிற்சி செய்து ஊக்குவித்து வருகின்றனர்.