வார இறுதி நாட்கள் மற்றும் ஆயுதபூஜை தின கொண்டாட்டத்தையொட்டிய தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு தினசரி இயக்கக்கூடிய 2100 பேருந்துகளுடன், கூடுதலாக 744 பேருந்துகள் நேற்று இயக்கப்பட்டுள்ளன. அவற்றில் 1,62,200 பயணிகள் பயணம் செய்தனர். அதனைத் தொடர்ந்து, இன்றைய தினம் தினசரி இயக்கக்கூடிய 2100 பேருந்துகளுடன் சென்னையிலிருந்து கூடுதலாக 938 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என தமிழக போக்குவரத்துத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழக போக்குவரத்துத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.