சென்னை : தமிழகத்தில்1 முதல் 9-ம் வகுப்பு தவிர பிற வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தி முடியும் நிலையில் ஆரம்ப மற்றும் நடுநிலை பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வருகிற 18-ந் தேதி ஆண்டு இறுதித்தேர்வு தொடங்குகிறது. அரசு, உதவிபெறும் பள்ளிகள் மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் 28-ந் தேதிக்குள் தேர்வை நடத்தி முடிக்க கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது. காலை 10 மணி முதல் 12.30 மணி வரையிலும் பிற்பகல் 1.30 மணி முதல் 4.30 மணி வரையிலும் வகுப்பு வாரியாக பிரித்து தேர்வு நடத்தப்படுகிறது. 29-ந்தேதியில் இருந்து கோடை விடுமுறை விடப்படுகிறது. ஒரு மாதம் விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் ஜூன் 1-ந்தேதி திறக்க கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது.