இந்திய நாட்டின் 75 சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று நாடு முழுவதும் அரசு மற்றும் பொதுமக்கள் சார்பில் கோலாகல கொண்டாட்டமும் ராணுவ, காவல் துறை அணிவகுப்புகளும் நடைபெற்றது. இதையொட்டி, உலகம் முழுவதும் உள்ள தலைவர்கள் பலரும் இந்தியாவுக்கு தங்களது நாட்டில் சார்பில் வாழ்த்துகளை பரிமாறியுள்ளனர். அதில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரான்ஸ் அதிபர் மேக்ரான், ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின், மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமுது சோலிஹ், ஆஸ்திரேலிய அதிபர் அந்தோணி அல்பானீஸ் உள்ளிட்ட பல தலைவர்கள் தங்களின் வாழ்த்தை தெரிவித்திருந்தனர். இவர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.