மதுரை: பொங்கல் பண்டிகையை ஒட்டி உலகப் புகழ்பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் களத்தில் இன்று 800 காளைகள் அவிழ்த்து விடப்படுகின்றன. காளைகளை அடக்க 355 இளைஞர்கள் முறைப்படி பதிவு செய்துள்ளனர். போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கிவைத்தார். முதலில் ஐய்யனார் கோயில் காலை உள்பட கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.
மேலும், அதனைத் தொடர்ந்து பாலமேடு ஜல்லிக்கட்டில் முதலிடம் பிடிக்கும் மாடுபிடி வீரருக்கு முதல்வர் ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்படுகிறது. விளையாட்டுத்துறை அமைச்சர் சார்பில் பரிசாக இரு சக்கர வாகனங்கள் பரிசாக வழங்கப்படுகிறது. அதேபோல் வீரர்களுக்கு தங்கக் காசு, ரொக்கப் பரிசு, இருச்சக்கர வாகனம், சைக்கிள், பீரோ, வீட்டு உபயோகப் பொருட்கள் எனப் பல்வேறு கண்கவர் பரிசுகளும் வழங்கப்படவுள்ளன.