8ஆவது மகளிர் ஆசியக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தில் உள்ள சில்ஹெட் நகரில் நடைபெற்றது. இதில், இந்திய அணி இறுதிச்சுற்றில் இலங்கை அணியை இன்று எதிர்கொண்டு விளையாடியது. இதில், தொடர்ச்சியாக 7ஆவது முறையாக ஆசியக்கோப்பை இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது இந்திய அணி. கடந்த 14 வருடங்கள் ஆசியக்கோப்பை இறுதிச்சுற்றில் இலங்கை அணி விளையாடுவது இதுவே முதல்முறை. இந்த நிலையில், முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தொடர்ந்து விளையாடிய இலங்கை மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 65 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து, விளையாடிய இந்திய அணி 8.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 71 ரன்கள் எடுத்துள்ளது. இதனால், இந்திய அணி, மகளிர் ஆசியக்கோப்பை டி20 இறுதிச்சுற்றில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியுள்ளது.