8ஆவது ஆசியக்கோப்பை 2022 மகளிர் டி20 போட்டி வங்கதேசத்தில் உள்ள சில்ஹெட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், இந்திய அணி தனது ஐந்தாவது போட்டியில் வங்கதேச அணியுடன் இன்று விளையாடி வருகிறது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. தொடர்ந்து விளையாடிய இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக ஷபாலி வர்மா 55 ரன்களும், ஸ்மிர்தி மந்தனா 47 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 100 ரன்கள் எடுத்தது. இதனால், இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. நேற்றைய போட்டியில் பாகிஸ்தானிடம் ஆட்டத்தை இழந்த இந்திய அணி இதற்கு முந்தைய போட்டிகளில் முதல் ஆட்டத்தில் இலங்கையையும், 2-வது ஆட்டத்தில் மலேசியாவையும், மூன்றாவது போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தையும் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, இந்திய அணி வரும் 10ஆம் தேதி தாய்லாந்து அணியை எதிர்கொள்கிறது.