கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வெந்து தணிந்தது காடு திரைப்படம் திரையரங்குகளில் வெளியான நிலையில், சிம்புவின் பேட்டி ஒன்றில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், “திரைப்பட கதைகள் எல்லாம் மிகவும் கவனமாக தேர்வு செய்கிறேன். அதிக கதைகள் வருகிறது, இருந்தாலும் என்னுடைய காட்டு பசிக்கு தீனி போடும் வகையில் வரும் கதைகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்று பேசியுள்ளார். மேலும், வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரூ.19 கோடி வசூலடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.