ஜிம்பாப்வே நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட திட்டமிட்டுள்ளது. அதன்படி, இன்று மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஹராரே நகரில் உள்ள விளையாட்டு மைதானத்தில் விளையாடி வருகிறது. இதில், முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடி வருகிறது. முன்னதாக விளையாடிய இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி முதலில் பந்துவீச்சையே தேர்வு செய்து விளையாடியது குறிப்பிடத்தக்கது. அதேபோல், இந்திய அணியில் சிராஜ், பிரசித் கிருஷ்ணாவுக்குப் பதிலாக தீபக் சாஹர், அவேஷ் கான் இடம்பெற்றுள்ளனர். அதேபோல், ஜிம்பாப்வே அணியிலும் மாற்றங்கள் நடந்துள்ளது. ஏற்கனவே இந்தியா தொடரின் முதல் 2 போட்டிகளை கைப்பற்றி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.