இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இந்தியாவுடன் மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியுடன் மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இரண்டு தினங்களுக்கு முன் நடந்தது. இதில், ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதைத்தொடர்ந்து, இரு அணிகள் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு நாக்பூரில் நடக்கவுள்ளது. தொடரை கைப்பற்ற மற்றும் சரிவில் இருந்து மீள இந்திய அணி இந்த போட்டியில் வெல்வது கட்டாயமாகியுள்ளது. மேலும், அண்மை காலமாக பந்துவீச்சியில் பின் தங்கி இருக்கும் இந்திய அணி இந்த போட்டியில் வெல்வது மூலமே தொடரை கைப்பற்ற இயலும் என்பதால் தனது முழு திறமையையும் சொந்த மண்ணில் காட்டும் என இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இந்த போட்டியை காண காத்திருக்கின்றனர்.