இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவுடன் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்றது. இதில் ஏற்கனவே இரண்டு போட்டிகள் நடந்த நிலையில், இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து, ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியுடன் டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி பங்கேற்கும் 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று மாலை 7 மணிக்கு இந்தூரில் உள்ள ஹொல்கார் கிரிக்கெட் மைதானத்தில் நடக்கவுள்ளது. ஏற்கனவே இரு போட்டிகளை வென்றுள்ள இந்திய அணி இந்த போட்டியிலும் வெல்வதன் மூலம் தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் விளையாடவுள்ளது.