புதுடெல்லி: பாராளுமன்ற மாநிலங்களவையில் வன விலங்குகள் பாதுகாப்பு திருத்த மசோதா நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் காப்புக் காடுகளை சிறப்பாக பராமரித்து, வன விலங்குகளைப் பாதுகாக்கவும், அந்தப் பகுதிகளில் கால்நடைகளை மேய்த்தல், குடிநீர் வசதி போன்ற குறிப்பிட்ட செயல்பாடுகளை அனுமதிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், நேற்று இந்த மசோதா குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டு விட்டதால், இரு அவைகளின் தற்பொழுது ஒப்புதலை பெற்று விட்டது.
மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கூறுகையில்: நைஜீரிய கடல் பகுதியில் கடந்த ஆகஸ்டு மாதம் ஒரு வர்த்தக கப்பல் சிறைபிடிக்கப்பட்டது. அதில் இருந்த 16 இந்திய மாலுமிகள் உள்பட 26 பேர் கைது செய்யப்பட்டனர். அவர் கினியாவில் சிறைவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது சதி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவர்களை மீட்க நைஜீரியா மற்றும் கினியா அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டுள்ளோம். கொேரானா பரவல் காரணமாக, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகளுக்கு செல்ல இந்தியர்கள் விசா பெறுவதில் சவால்களை சந்தித்து வருவது மத்திய அரசுக்கு தெரியும். விசா வழங்குவதை எளிமைப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அரசுகளை வலியுறுத்தி வருகிறோம் என தெரிவித்தார்.