சென்னை : சென்னை மாநகரின் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கோயம்பேடு, அண்ணாநகர், வடபழனி உள்ளிட்ட பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டி வதைத்த நிலையில் திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னை மாநகரின் ஒரு சில இடங்களில் பரவலாக மழைபெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.