மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ் ஆப்பில் புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, வாட்ஸ் ஆப் குழுவிலிருந்து யாருக்கும் வலியுறுத்தாமல் வெளியேறுவது, வாட்ஸ் ஆப் பயனரை யாா் தெரிந்துகொள்ளலாம், யாா் தெரிந்து கொள்ளக்கூடாது என முடிவு செய்வது போன்ற புதிய அம்சங்கள் இடம்பெறவுள்ளன. தற்போது உள்ள ஒருவரால் அனுப்பப்படும் தகவல் ஒருமுறை பாா்க்கப்பட்ட பின், தானாகவே அழிந்துவிடுவது என்றும் இருந்தாலும், அழிவதற்கு முன்பாக அதனைப் படம் பிடித்து (ஸ்கிரீன்ஷாட்) கொள்ளும் வசதி உள்ளது. இந்த நிலையில், இனி ஒருமுறை பாா்த்த பின் தானாகவே அழிந்துவிடும் தகவலை படம்பிடிக்க முடியாத அம்சமும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது என மெட்டா நிறுவனர் மாா்க் ஸூகா்பெர்க் தெரிவித்துள்ளாா்.