ட்விட்டர் நிறுவனத்தை டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் வாங்க உள்ளதாக ஒரு தகவல் பரவியது. இதனையடுத்து, ட்விட்டரில் எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில், ட்விட்டுகளை எடிட் செய்து திருத்த விருப்பமா என கேட்டிருந்தார். இதனையடுத்து, ட்விட்டரில் பல மாற்றங்கள் ஏற்படுத்த இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இதனால், விரைவில் ட்விட்டரில் விரைவில் எடிட் பட்டன் சேர்க்கப்படவுள்ளது. இந்த நிலையில், வாட்ஸ்ஆப்பிலும் விரைவில் எடிட் பட்டன் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், ட்விட்டருக்கு முன் வாட்ஸ்ஆப்பில் எடிட் பட்டன் சேர்க்கப்படும் என எண்ணப்படுகிறது. பெட்டா வெர்ஷன் வாட்ஸ்ஆப்பில் இதற்கான சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு முன்வரை நாம் டைப் செய்து அனுப்பிய செய்திகளை எடிட் செய்து திருத்தும் வசதி இல்லை. எனினும் டெலிட் செய்து அழிக்க முடியும். இந்த நிலையில், வரும் காலத்தில் வரும் புதிய பீட்டா வெர்ஷன் வாட்ஸ்ஆப் மூலம் நாம் அனுப்பிய செய்திகளை எடிட் செய்ய முடியும். Copy, Forward போன்று Edit ஆப்ஷனும் வரும் என்று வாட்ஸ்ஆப் பயனர்கள் எதிர்பார்க்கின்றனர்.