உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ள மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்ஆப் சேவை பல நாடுகளில் கடந்த 25ஆம் தேதி பிற்பகல் 2 மணி நேரத்துக்கு மேலாக முடங்கியது. இதுத்தொடர்பாக, வாட்ஸ்ஆப் பயனர்களில் சிலர் டிவிட்டர், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் சுட்டிக்காட்டி புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, வாட்ஸ்ஆப் சேவையை மெட்டா நிறுவனம் சரிசெய்தது. எனினும், சேவை முடங்கியதற்கான காரணம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. இந்த நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வாட்ஸ்ஆப் சேவை முடங்கியதற்கான காரணத்தை கேட்டு மத்திய தொழில்நுட்ப அமைச்சகம் மெட்டா நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.