வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்நடை பண்ணைகளில் வைத்துக்கொள்ள வேண்டிய முதலுதவி மருந்து பொருட்கள் விவரத்தினை கால்நடை பராமரிப்புத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20ஆம் தேதிக்குப் பின் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடைகளை பருவமழையின் போது பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, கால்நடை பண்ணைகளில் வைத்துக்கொள்ள வேண்டிய முதலுதவி மருந்துப் பொருட்கள் விவரத்தினை கால்நடை பராமரிப்புத்துறை வெளியிட்டுள்ளது. மருந்தின் பெயர், நோய் விவரம், கொடுக்கும் அளவு ஆகியவையும் வெளியிடப்பட்டுள்ளது
த மருந்துகளை கால்நடை வளர்ப்போர் பண்ணைகளில் தேவையான அளவு வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், மருந்துகளை அவசர காலங்களில் முதலுதவிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும், மருந்தின் அளவு, கொடுக்கும் முறை ஆகியவற்றை அறிந்து பயன்படுத்த வேண்டும் என்றும் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.