சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன், செஸ் ஒலிம்பியாட் தொடர் நடத்தியதில் தமிழக அரசு முறைகேடு செய்துள்ளது என்று விமர்சனம் கூறிவரும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்க்கு பதில் கூறியுள்ளார். அதில், ”அதிமுக ஒலிம்பியாட் தொடரை நடத்தியிருந்தால் 500 கோடி ரூபாய் செலவு செய்திருக்கும். ஆனால், தமிழக முதலமைச்சர் திறமையால் ரூ.114 கோடியில் சர்வதேச ஒலிம்பியாட் தொடரை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாக விளக்கமளித்தார். தொடர்ந்து பேசிய மெய்யநாதன், செஸ் ஒலிம்பியாட் வரவு செலவு கணக்குகளை பொதுத்தளத்தில் வைப்பதாகவும் யார் வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.