சென்னையில், எழிலகத்தில் மழை, வெள்ள பாதிப்பு தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்க அவசரகால செயல்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இன்று அவசரகால செயல்பாட்டு அறையில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மழை, மற்றும் மழைக்கால மீட்பு பணிகள் தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அவருக்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவசரகால செயல்பாட்டு அறையில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர், “வடசென்னையில் மழை பாதிப்புகள் குறித்த கேள்விக்கு, வட சென்னையில் தண்ணீர் தேங்கி இருப்பதாக புகார் வந்திருக்கிறது. தொடர்ந்து அதனை அப்புறப்படுத்தி வருகிறோம் என்றும், பத்தாண்டு கால அதிமுக ஆட்சி சென்னை மட்டுமல்லாமல் தமிழகத்தையே சீரழித்துவிட்டு சென்று இருக்கிறார்கள் அதை எல்லாம் சரி செய்ய ஒன்றரை ஆண்டு கால ஆட்சியில் சரி செய்து விடுவோம் என்று நம்பிக்கை உள்ளது என்றும் தெரிவித்தார்.