சென்னை: கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டிருந்த நேரத்தில், முதல்வரின் வழிகாட்டுதலின்படி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சிறப்பாக செயல்பட்டது. அந்த எண்ணிக்கை தினமும் ஒன்று அல்லது இரண்டு அளவிற்கு குறைந்து வந்தது.
மத்திய அரசின் சுகாதாரத்துறை நெறிமுறைகளின்படி, அனைவரும் தேவைக்கேற்ப முக கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை பின்பற்றுவது, கைகளை சோப்பைக்கொண்டு அடிக்கடி சுத்தம் செய்து கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. இந்தநிலையில் இன்புளுயன்சா காய்ச்சலை தடுக்கும் வகையில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் தமிழ்நாடு முழுவதும் 1,558 இடங்களில் அமைக்கப்பட்டு அதில் 2,663 பேருக்கு காய்ச்சல் இருப்பது கண்டறிப்பட்டுள்ளது. இந்த காய்ச்சல் முகாம்கள் நடமாடும் ஆஸ்பத்திரிகளை கொண்டு தொடர்ந்து நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.