நார்வே நாட்டில் ப்லிஸ்ட் செஸ் சாம்பியன் போட்டி நடைப்பெற்று வருகிறது. இந்தப்போட்டியில் இந்தியாவின் செஸ் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த்(52) பங்கேற்று விளையாடினார். இந்த போட்டியில், ஏழாவது தொடரில் நார்வே நாட்டைச் சேர்ந்த உலக செஸ் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை எதிர்த்து விஸ்வநாதன் ஆனந்த் விளையாடினார். தனது சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்திய விஸ்வநாதன் ஆனந்த், மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்து வெற்றியை தனதாக்கினார். இந்த தோல்வியின் மூலம் உலக தர வரிசையில் முதல் இடத்தில் இருந்த மேக்னஸ் கார்ல்சனை இடண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இதே போட்டியின் ஐந்தாவது சுற்றில் அனீஸ் கிரியுடனும், ஒன்பதாவது சுற்றில் பிரான்ஸ் மாக்சிம் லிச்சியர் லாக்ரேனுடனும் தோல்வி அடைந்ததால் விஸ்வநாதன் ஆனந்த் 5 புள்ளிகளை பெற்று நான்காவது இடத்தில் உள்ளார்.