புதுடெல்லி: டெல்லியில் நடைபெற்ற சர்வதேச தூதரக ஒத்துழைப்புக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஜெகன் மோகன் ரெட்டி பேசுகையில்:- ஆந்திராவின் புதிய தலைநகரம் விசாகப்பட்டினம் என்று அறிவித்துள்ளார். “எங்கள் தலைநகரான விசாகப்பட்டினத்திற்கு உங்களை நான் அன்புடன் வரவேற்கிறேன். மாநிலத் தலைமையகமாகவும், அது ஆளுநரின் தலமாகவும் இருக்கும். ஆனால், சட்டப்பேரவை அமராவதியிலிருந்து இயங்கும். உயர் நீதிமன்றம் கர்னூலுக்கு மாற்றப்படும் ஆந்திராவில் தொழில் தொடங்குவது எவ்வளவு எளிமையானது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். நானும் வைசாக் நகருக்கு குடியேறுகிறேன்” என்று கூறியுள்ளார்.