டி20 உலகக் கோப்பைப் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில், அடிலெய்டில் இந்தியா – வங்கதேசம் அணிகள் இன்று விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் தீபக் ஹூடாவுக்குப் பதிலாக அக்ஷர் படேல் இடம்பெற்றுள்ளார். இதனால் தினேஷ் கார்த்திக் இந்த ஆட்டத்தில் விளையாடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆட்டத்தில் 16 ரன்கள் எடுத்தபோது புதிய சாதனை நிகழ்த்தினார் விராட் கோலி. டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்கிற பெருமையை கோலி பெற்றுள்ளார். இதற்கு முன்பு இலங்கையின் ஜெயவர்தனே 1016 ரன்கள் (31 ஆட்டங்கள்) எடுத்த நிலையில் தற்போது அதைத் தாண்டியுள்ளார் கோலி. அதன்படி, டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விராட் கோலி – 1017 (25 ஆட்டங்கள்) பெற்றுள்ளார்.