நடிகர் விஜய்யின் நடிப்பில் வம்சியில் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வாரிசு’ திரைப்படம் உலகம் முழுவதும் எதிர்வரும் 2023 பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வெளியாவதில் இருந்த சிக்கல் தீர்வுக்கு வந்துள்ளது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.படத்திற்கான வசனத்தை விவேக் எழுதி உள்ளார் . இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் மற்றும் பிவிபி சினிமா தயாரித்துள்ளது.
இந்த படத்தில் ராஷ்மிகா, ஷாம், பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஸ்ரீகாந்த், குஷ்பு, சங்கீதா, ஜெயசுதா, யோகி பாபு, ஸ்ரீமன், ஜான் விஜய், விடிவி கணேஷ், சஞ்சனா சாரதி, பரத் ரெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘ரஞ்சிதமே’ கடந்த 5-ம் தேதி வெளியாகி இருந்தது. இதனை நடிகர் விஜய் பாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.