விஜயதசமி தினத்தையொட்டி இன்று உலகப் பிரசித்தி பெற்ற திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே பூந்தோட்டத்தில் அமைத்துள்ள கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோவிலில் வித்யாரம்பம் விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதேபோல், உலகம் முழுவதும் உள்ள இந்து மக்கள் தங்கள் குழந்தைகளின் கல்வியை இந்த நன்னாளில் தொடங்குகின்றனர். வித்யாரம்பம் என்பது விஜயதசமி நாளில் பெற்றோர் தங்களின் குழந்தைகளின் கல்வியை முதல்முதலில் தொடங்கும் நாளாகும். இந்த நாளில் குழந்தைகள் தமிழில் முதல் எழுத்தான ‘அ’ என்ற எழுத்தை நெல்மணிகளில் எழுதி தங்களின் கல்வியை தொடங்கியுள்ளனர். மேலும், தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் விஜயதசமியை முன்னிட்டு மாணவர் சேர்க்கை இன்று நடைபெற்று வருகிறது.