இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவரான வெங்கய்யா நாயுடுவின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளதால் அடுத்த குடியரசுத் துணைத் தலைவருக்கான தேர்தலை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று (ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி) தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஜெகதீப் தன்கர், எதிர்க்கட்சிகள் சார்பில் மார்கரெட் ஆல்வா போட்டியிடுகின்றனர்.