குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு மூன்று நாள் பயணமாக டெல்லியில் இருந்து ராணுவ விமானத்தில் சென்னை விமான நிலையம் வந்தடைந்துள்ளார். அவரை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் சேகர் பாபு மற்றும் அரசு உயர் அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள் வரவேற்றனர். கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்கும் வெங்கையா நாயுடு வருகிற 29ஆம் தேதி கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி விழாவில் கலந்து கொண்டு டெல்லி செல்லவுள்ளார். குடியரசுத் துணைத் தலைவர் சென்னை வந்துள்ளதையடுத்து சென்னை விமான நிலையம், கிண்டி ஆளுநர் மாளிகை மற்றும் கேளம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.