வேலூர் மாவட்டத்தில் உள்ள அப்துல்லாபுரத்தில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு காற்று மற்றும் நீர் மாசுபடுவதை தடுக்கவும், சுற்றுசூழலை பாதுகாக்க மரக்கன்றுகளை நடவேண்டும் என்பதை வலியுறுத்தி சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டனர். இந்த விழாவில், அரசு தொழிற்பயிற்சி நிலைய துணை முதல்வர் ரவி மற்றும் பயிற்சி அலுவலர் யுவக்குமார் உள்ளிட்டோர் மற்றும் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களும் கலந்துகொண்டு வேப்பமரம், அரசரமரம், புங்கமரம், தேக்கு, பாதாம் உள்ளிட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகளை நட்டு சுற்றுசூழல் குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினார்கள்.