குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, வேலூர் மாவட்டம், வேலூர் காந்தி சிலை அருகில் உலக குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் குமாரவேல் பாண்டியன் கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் பள்ளி மாணவ, மாணவிகள் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த பதாகைகளை ஏந்தி சென்றனர். அதில், ”குழந்தைகளை எங்கும் பணியில் அமர்த்தக்கூடாது, கல்வி கற்கும் வயதில் கல் உடைக்க செல்வதா?, கற்பது குழந்தைகளின் உரிமை, பள்ளிக்கு அனுப்புவது பெற்றோரின் கடமை” போன்ற வாசகங்களை எழுப்பி ஊர்வலமாக சென்றனர். இதில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், வேலூர் மேயர் சுஜாதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.