திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின்படி, குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு போக்குவரத்து காவல்துறையினர் ரூ.10ஆயிரம் அபராதமும் நீதிமன்ற வாரண்ட் வழங்குகின்றனர். இதனையடுத்து, 14 நாட்களுக்குள் வாகன ஓட்டிகள் அபராத தொகை செலுத்த வேண்டும். எனினும், பல வாகன ஓட்டிகள் அபராத தொகையை செலுத்தாமல் வாகனத்தை இயக்கி வருகின்றனர். இதையடுத்து, குடிபோதையில் வாகனம் ஓட்டி சிக்கும் வாகன ஓட்டிகள் 14 நாட்களுக்குள் அபராத தொகையை செலுத்தவில்லையென்றால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை செய்துள்ளனர். கடந்த ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை குடிபோதையில் வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாத 50 வாகன ஓட்டிகளின் கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.