கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டத்தில் கும்லா அருகே உள்ள ஸ்ரீ அனந்தபுரம் கோயில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக பாபியா என்ற 75 வயது முதலை வசித்து வந்தது. இந்த முதலை தண்ணீரால் சுழப்பட்ட இந்த கோயிலில் கடவுளுக்கு படைக்கப்படும் உணவையே இந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக உண்டு சைவ முதலையாக வாழ்ந்து வந்துள்ளது. இந்த நிலையில், முதலை உயிரிழந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பக்தர்கள் கோயில் முன்பு வைக்கப்பட்டிருக்கும் முதலைக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அசைவ உணவுகளை மட்டுமே வழக்கமாக உண்ணும் ஊர்வண இனத்தைச் சேர்ந்த முதலைகள் இந்து கோயில், இறைவனுக்காக சமைக்கப்படும் சைவ உணவுகளை மட்டுமே சாப்பிட்டு வாழ்ந்துவந்தது பக்தர்களை மிகுந்த ஆச்சர்யத்துக்குள்ளாக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.