இந்தியாவின் இசைக்குயில் என்று பெருமையோடு அழைக்கப்படும் பழம்பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் பிறந்த நாளை முன்னிட்டு, அவரின் நினைவாக 7.9 கோடி மதிப்பீட்டில் சரயு நதிக்கரையின் குறுக்கில், அயோத்தியின் முக்கிய சந்திப்பில் 14 டன் எடையுள்ள 40 அடி நீளமுள்ள வீணை சிலை நிறுவப்பட்டுள்ளது. இதனை இன்று பிரதமர் மோடி காணொலி வாயிலாகத் திறந்து வைத்தார். முன்னதாக, லதா மங்கேஷ்கரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை பதிவிட்டிருந்தார்.