புதுடெல்லி : இந்த நிலையில் வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்துள்ள கூடுதல் பிரமாணபத்திரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:- ஸ்டெர்லைட் ஆலை இயங்கியபோது நேரிடையாக 4 ஆயிரம் பேருக்கும், மறைமுகமாக 20 ஆயிரம் பேருக்கும் வேலைவாய்ப்பு வழங்கிவந்தது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் தாமிரத்தை ஏற்றுமதி செய்யும் நாடாக இருந்த இந்தியா தற்போது இறக்குமதி செய்யும் நாடாக மாறி உள்ளது. நிபுணர் குழுவின் கண்காணிப்பின் கீழ் ஆலையை இயக்க அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அந்தப் பிரமாணபத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு தமது கருத்தை மே மாதம் 4-ந்தேதி நடக்கும் அடுத்த விசாரணையில் தெரிவிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.