தெலுங்கு திரைப்பட இயக்குநர் வம்சியின் இயக்கத்தில் நடிகர் விஜய் ‘வாரிசு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், யோகிபாபு, ஷாம் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். வரும் பொங்கலுக்கு வெளியாகலாம் என்று எண்ணப்படும் இந்த திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமை ரூ.50 கோடிக்கும் டிஜிட்டல் உரிமை ரூ.60 கோடிக்கும் விற்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால், மிகுந்த மகிழ்ச்சியில் தயாரிப்பாளர் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.