வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த 244 இஸ்லாமிய மக்கள் இந்த மாதம் 12,13,14 ஆகிய மூன்று நாட்கள் ஹஜ் புனித யாத்திரைக்கு செல்ல உள்ளனர். அவர்களுக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள காயிதேமில்லத் அரங்கில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் முன்னிலையில் மாவட்ட சுகாதாரத்துறையின் சார்பில் சிறப்பு நோய் தடுப்பூசி மற்றும் சொட்டு மருந்துகள் போடப்பட்டது. அப்போது மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் பானுமதி உள்ளிட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.