சென்னைக்கு அருகே தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் ட்ரோன் பயிற்சி ஆய்வகத்தை தொடங்கி வைத்த மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி அனுராக் தாக்கூர்கூறியுள்ளதாவது: விவசாயத்துறையில் இதன் பயன்பாடு மிக அதிகமாக இருந்து வருகிறது. பூச்சிமருந்து தெளித்தல் போன்ற பல்வேறு பணிகளுக்கு ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. பெருந்தொற்று காலத்தில் தடுப்பூசிகளை நாடு முழுவதும் கொண்டு சென்று விநியோகிப்பதில் ட்ரோன்கள் பெரும் பங்கு வகித்தன.
ட்ரோன்கள் விவசாயத்துறைக்கு மட்டுமல்லாமல் பாதுகாப்பு, சுற்றுலா, பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் ட்ரோன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சட்டவிரோத சுரங்கத் தொழிலை தடுப்பதற்கும் ட்ரோன் தொழில்நுட்பம் பயன்படும். ட்ரோன் தொழில்நுட்பத்தில் இந்தியா உலகின் மையமாக உருவெடுக்கும். இதற்காக அடுத்த ஆண்டுக்குள் குறைந்தபட்சம் ஒரு லட்சம் ட்ரோன் பைலைட்டுகளை தயார்படுத்த வேண்டும். இதன் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.