வாஷிங்டன்: நேட்டோவில் இணையும் உக்ரைனின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி இறுதியில் அந்நாடு மீது ரஷியா போர் தொடுத்தது. ராணுவ நடவடிக்கை பெயரிலான இந்த படையெடுப்பு 11 மாதங்களாக தொடர்ந்து நீடித்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, மேற்கத்திய நாடுகளின் ஆயுத, நிதி உதவிகள் சார்ந்த ஆதரவு கிடைத்து வருகிறது. மறுபுறம் ரஷியாவை பலவீனமடைய செய்யும் பொருளாதார தடைகள் உள்ளிட்டவையும் விதிக்கப்பட்டு வருகின்றன.
ரஷிய படைகளின் தாக்குதலை முறியடிக்க முடியும் என அமெரிக்க உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை வைத்த நிலையில், உக்ரைனுக்கு எப்-16 பைட்டர் போர் விமானத்தை அமெரிக்கா அனுப்பாது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.