அமெரிக்கா-சீனா நாடுகளிடையேயான உறவில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில் இரு நாட்டின் தலைவர்களான அமெரிக்கா அதிபர் ஜோ பைடனும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் தொலைபேசி மூலம் கலந்துரையாடியதாக வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை தகவல் அளித்துள்ளது. ஐந்தாவது முறையாக இந்த கலந்துரையாடல் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த உரையாடலில் பருவ நிலை மாற்றம் மற்றும் சுகாதார பாதுகாப்பு உள்பட இரு நாடுகளும் இணைந்து செயல்படக் கூடிய பகுதிகள் குறித்து பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இரு நாட்டு தலைவர்களும் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.