ரயில்வே பணியின் ஆட்சேர்ப்புக்கான தேர்வுகள் அனைத்தும் முன்னதாக Indian Railway Management Service (IRMS) மூலம் நடத்தப்பட்டு வந்தது. தற்போது, வெளியான அறிவிப்பின் படி, இனி 2023ம் ஆண்டு முதல் ரயில்வே ஆட்சேர்ப்புக்கான தேர்வுகளை மத்திய பணியாளர் தேர்வு வாரியம்(UPSC) தனித்தேர்வாக நடத்த உள்ளது. பொதுவாக IRMS தேர்வுகளானது முதல்நிலை மற்றும் மெயின் தேர்வுகள் இரண்டு பிரிவுகளாக நடத்தப்படுகிறது.
தேர்வுகள் முறையே வரும் பிப்ரவரி 1 மற்றும் மே 28 ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் முதன்மை தேர்வுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். முதன்மை தேர்வானது தகுதித் தாள்கள், தகுதி மற்றும் ஆளுமைத் தேர்வுக்கான விருப்பத் தாள்கள் என்ற படிநிலைகளில் நடத்தப்படுகிறது. மேலும்,குறிப்பாக, தகுதி தேர்வானது தேர்வர்கள் தேர்வு செய்யும் விருப்ப மொழி பாடமாகவும், 2 வது தாள் ஆங்கில தாளாகவும் இருக்கும். IRMS UPSC 2023 தேர்வு குறித்த மேலும் அதிக தகவல்களை upsc.gov.in. என்ற அதிகாரபூர்வ தளத்தில் வெளியாகியுள்ளது.