புதுடெல்லி : பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் ஜெகதீஷ்குமார் கூறுகையில் :- பாடப்புத்தகங்களை தயாரிப்பதில் பல்கலைக்கழகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தாய்மொழி, மாநில மொழிகளில் பாடப்புத்தகங்களை எழுதுவது, கற்பித்தலில் அம்மொழிகளை பயன்படுத்துவது, வேறு மொழி பாடப்புத்தகங்களை தாய்மொழியில் மொழி பெயர்ப்பது ஆகியவற்றையும் ஊக்குவிக்க வேண்டும். எனவே, ஒவ்வொரு பல்கலைக்கழகமும் தங்களது மாணவர்கள், தேர்வில் மாநில மொழிகளில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். ஆங்கில வழி பாடத்திட்டமாக இருந்தாலும் கூட மாநில மொழியில் எழுத அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.