புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில், தீர்ப்பை எளிதாக அறிய இணையத்தில் கூடுதலாக ஒரு வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதுகுறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் நேற்று கூறியதாவது:உச்ச நீதிமன்றத்தின் அனைத்து தீர்ப்புகளுக்கும் தனித்துவ எண் வழங்கப்பட உள்ளது. முதல்கட்டமாக கடந்த 2014-ம் ஆண்டு முதல்கடந்த ஜனவரி 1-ம் தேதி வரையிலான தீர்ப்புகளுக்கு தனித்துவ எண் வழங்கப்பட உள்ளது. இதன்படி30,000 தீர்ப்புகளுக்கு பிரத்யேக எண் அளிக்கப்படும்.
இரண்டாம் கட்டமாக 1995-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை வரையிலான தீர்ப்புகளுக்கும் மூன்றாம் கட்டமாக 1950-ம் ஆண்டுமுதல் 1994-ம் ஆண்டு வரையிலான தீர்ப்புகளுக்கும் தனித்துவ எண்கள் வழங்கப்படும். பிராந்தியமொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்ட தீர்ப்புகளை சரிபார்க்க நீதிபதிகள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு தலைமைநீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.