இந்தியாவில் பொருளாதாரத்தை கணிக்கும் தனியார் அமைப்பு ஒன்று வெளியிட்டுள்ள வேலை வாய்ப்பு குறித்த ஆய்வின் முடிவில், இந்தியாவில் வேலை வாய்ப்பின்மை விகிதம் 8.3 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இதில், ஹரியானா மாநிலத்தில் 37.3 சதவிகிதமாக முதல் இடத்திலும், சத்தீஸ்கர் மாநிலம் 0.4 சதவிகிதமாக கடைசி இடத்திலும் உள்ளது. தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பின்மை 7.2 சதவிகிதமாக இருப்பதாக குறிப்பிடப்படுள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் இந்தியா முழுவதும் மொத்தமாக 6.8 சதவிகிதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை, ஆகஸ்ட் மாத தரவுகளின்படி 8.3 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.