ஐநா சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், இன்று 3 நாள் அரசுமுறைப்பயணமாக இந்தியா வருகிறார். இங்கு அவர், பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்து பேச உள்ளார். இந்த பேச்சுவார்த்தையில் சில முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமராக அன்டோனியோ குட்டரெஸ் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் முறையாக ஐ.நா. பொதுச் செயலாளராக பதவியேற்றார். பின்னர், தொடர்ந்து இந்தாண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் இரண்டாவது முறையாக மீண்டும் அவரே பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டு நீடித்துவரும் நிலையில், குட்டரெஸ் இந்தியா வருவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.