ஐரோப்பா நாடுகளில் கடுமையான வெப்பநிலை உயர்ந்துள்ளது. இதனையடுத்து இங்கிலாந்தில் நிலவும் உச்சபட்ச வெப்பம் காரணமாக தேசிய அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. வரும் வாரத்தில் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் அதிகபட்ச வெப்பநிலை நிலவும் என பிரிட்டன் வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், இரவு நேரத்திலும் வெப்பம் அதிகம் காணப்படும் என்றும், அதிகபட்சமாக நகர்ப்புறங்களில் வெப்பநிலை உச்சம் பெறும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உச்ச வெப்பநிலை நிலவும் நேரங்களில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.