மகாராஷ்டிரா மாநிலத்தில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி ஆட்சி மீது அதிருப்தி அடைந்துள்ள 50 எம்.எல்.ஏ.,க்கள் அசாம் மாநிலம் கெளகாத்தியில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் தங்கியுள்ளனர். இதனால், உத்தவ் தாக்கரே அரசு தனது பெரும்பான்மையை இன்று நிரூபிக்கும்படி ஆளுநர் கோய்ஹாரி உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில், ஆளுநர் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சிவசேனா கட்சியின் சட்டமன்ற கொறடா சுனில் பிரபு வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கின் மீது நேற்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், ஆளுநரின் உத்தரவின்படி இன்று உத்தவ் தாக்கரே அரசு இன்று பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து, பின்னடைவை சந்தித்த உத்தவ் தாக்கரே, நேற்று நள்ளிரவு மகாராஷ்டிரா முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.